சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம்: உரிமை மீறல் நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு


சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம்: உரிமை மீறல் நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
x
தினத்தந்தி 28 Sep 2020 7:26 AM GMT (Updated: 28 Sep 2020 7:26 AM GMT)

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில், திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நோட்டீசுக்கு தடை விதித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

Next Story