தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று


தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 28 Sep 2020 11:08 AM GMT (Updated: 28 Sep 2020 11:08 AM GMT)

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேமலதா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story