மாநில செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் + "||" + DMDK leader Vijayakanth's health is stable - Hospital management

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,

அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விஜயகாந்த்துக்கு நோய் தொற்று அறிகுறி இல்லை என்றும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான பிரேமலதா விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.