மாநில செய்திகள்

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம் + "||" + There is no environment for holding by-elections for vacant assembly constituencies in Tamil Nadu at present - Election Commission

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் திருவெற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.   திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளின் 6 மாத அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

அதேபோன்று, கேரளம், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக,  4 மாநில தலைமைச் செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர் இதையடுத்து தேர்தல் ஆணையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், காலியாக உள்ள இதர நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அந்தந்த மாநில சூழ்நிலைகளைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அக்டோபர் 19: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.
2. அக்டோபர் 17: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.
3. நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து
ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.
5. சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு ; மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு:-
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு:-