மாநில செய்திகள்

துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + The name of the Deputy Chief Minister will be featured only in the main events - Minister Jayakumar

துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்

துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்
துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. அதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. தனியார் பங்களிப்புடன் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால்  அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம்பெறவில்லை. 

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழாவில் துணை முதல்வர் பெயர் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு, துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை நிறைவடைந்தது.
2. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆலோசனை
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.