"பெற்றோர்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேற காரணம்" - உயர்நீதிமன்றம் வேதனை


பெற்றோர்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேற காரணம் - உயர்நீதிமன்றம் வேதனை
x
தினத்தந்தி 30 Sep 2020 11:41 AM GMT (Updated: 30 Sep 2020 11:41 AM GMT)

பெற்றோர்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேற காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை,

காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்க கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பெற்றோர்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேற காரணம் என்றும் திருமணமான நபர்களுடன், இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது மிகுந்த வேதனை அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் 10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story