மாநில செய்திகள்

தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு + "||" + 7 more special trains announced for Tamil Nadu

தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது.
சென்னை,

தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா, ராமேஷ்வரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

எர்ணாகுளம்- காரைக்கால் இடையேயும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேற்கூறிய சிறப்பு ரெயில்கள் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 5 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்-முன்பதிவு இன்று தொடங்குகிறது
மேலும் 5 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது.
2. சென்னை-நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சென்னை-நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
3. சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது
சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு துவங்கியது.
4. தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை சிறப்பு ரெயில் சேவை ரத்து
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரெயில்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.