பெட்ரோல், டீசல் விலையில் 3வது நாளாக இன்று மாற்றம் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் 3வது நாளாக இன்று மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 1 Oct 2020 7:46 AM IST (Updated: 1 Oct 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலையில் 3வது நாளாக இன்றும் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன.  நாடு முழுதும்,  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், எரிபொருள் தேவை கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்தன. 

ஊரடங்கில் தளர்வுக்ளை அறிவிக்கத் தொடங்கியதும், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. 

இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே (பெட்ரோல் லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 76.10 ரூபாய்) இன்றும் விற்பனையாகிறது.

Next Story