தனது நண்பரை கவுரவிக்க இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? - ப.சிதம்பரம் கேள்வி

தனது நண்பரை கவுரவிக்க இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? - ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 1 Oct 2020 10:01 AM IST (Updated: 1 Oct 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

தனது அன்பு நண்பரை கவுரவிக்க இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை, 

தனது அன்பு நண்பரை கவுரவிக்க இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டரில், “திரு டொனால்டு டிரம்ப் இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணைத்து, மூன்று நாடுகளும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். மூன்று நாடுகளும் அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திரு.மோடி தனது அன்பு நண்பரை கவுரவிப்பதற்காக மற்றொரு ‘நமஸ்தே டிரம்ப்!’ பேரணியை நடத்துவாரா?” என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே முதல் நேருக்கு நேர் விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் இந்தியா குறித்த உரையாடல்கள் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story