குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “குடியரசு தலைவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், தேசத்திற்கு நீண்ட நாள் சேவையாற்ற வாழ்த்துகிறேன் என்று மலர் கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டரில், “எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி ஸ்ரீ.ராம் நாத் கோவிந்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது பிறந்த நாளில் தேசத்துக்கும் அதன் மக்களுக்கும் அவர் அளித்த மதிப்புமிக்க தன்னலமற்ற சேவையைத் தொடர அவருக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்குமாறு கடவுளை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story