நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழா: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழா: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
x
தினத்தந்தி 1 Oct 2020 10:47 AM IST (Updated: 1 Oct 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை, 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

இதனையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை அடையாறு மணிமண்டபத்தில், சிவாஜி கணேசன் படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட அனைவருக்கும் கட்சியின் கட்டுப்பாடு ஒன்றுதான். அதிமுகவில் எப்போது பிளவு ஏற்படும் என்று எதிரிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அமைச்சர்களும், தொண்டர்களும் அதற்கு இடமளிக்கக்கூடாது. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் தனிதனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை” என்று தெரிவித்தார்.

Next Story