ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார் - அமைச்சர் செங்கோட்டையன்
ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு :
ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
முதல் அமைச்சர் பழனிசாமி ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அந்த நல்லாட்சியின் பயனாக எங்கும் நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள், மக்கள் மகிழும் அளவிற்கு மழை பெய்து வருகிறது.கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என பிரதமரே பாராட்டும் வகையில் முதல்வர் செயல்பாடு உள்ளது. ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என கூறினார்.
இதையடுத்து முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையில் நடக்கும் கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது? அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், அறைக்குள் பேசுவதை வெளியில் கூறுவது நாகரீகம் அல்ல என்பது தான் எனது கருத்து என்றார்.
Related Tags :
Next Story