சென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை


சென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 1 Oct 2020 8:34 AM GMT (Updated: 2020-10-01T14:04:05+05:30)

சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை

சென்னை தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவை சேர்ந்த நூருல் யாக்கூப் என்பவர், நேற்று மாலை வீட்டில் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் அனைவரையும் கட்டிப் போட்டு விட்டு, வீட்டிலிருந்த 95 ஆயிரம் ரூபாய், 250 சவரன் நகைகள், வாசலில் நின்ற கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கடந்த சில தினங்களாக யாக்கூபின் வீட்டில் தங்கியிருந்து தலைமறைவாகியுள்ள தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த உறவினர் மொய்தீன் என்பவரது கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

யாகூப் குடும்பத்தில் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

Next Story