கொரோனாவில் இருந்து குணமடைந்து பொள்ளாச்சி ஜெயராமன் வீடு திரும்பினார்


கொரோனாவில் இருந்து குணமடைந்து பொள்ளாச்சி ஜெயராமன் வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 2 Oct 2020 12:35 AM IST (Updated: 2 Oct 2020 12:35 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொள்ளாச்சி ஜெயராமன் குணமடைந்து வீடு திரும்பினார்.

சென்னை,

தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன்பின்னர் அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அவர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.

பொள்ளாச்சி ஜெயராமனை சிறிது நாட்கள் வீட்டிலேயே தங்கியிருந்து ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story