திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார் - தமிழருவி மணியன் அறிக்கை


திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார் - தமிழருவி மணியன் அறிக்கை
x
தினத்தந்தி 2 Oct 2020 1:52 AM IST (Updated: 2 Oct 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கம் தான் அறிமுகப்படுத்தியது. 2014-ல் 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கி 75 லட்சம் வாக்குகளைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தவர்கள் நாம். வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன் நிறுத்துவோம். ஊழல் மலிந்த 2 திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க, ரஜினிகாந்தால் மட்டுமே, அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்ட முடியும்.

சமய நல்லிணக்கம், மதச்சார்பற்ற ஆட்சிமுறை, ஊழலுக்கு எள்ளளவும் இடம் தராத நேரிய நிர்வாகம், வெறுப்பு அரசியலுக்கு இடமின்றி அனைவரையும் அன்பினால் ஆரத் தழுவி அரவணைக்கும் உயர்பண்பு, சாதி மத உணர்வுகளுக்கு எந்த நிலையிலும் இடம் தராத மேன்மையான வாழ்க்கை முறை ஆகியவையே காந்தியத்தின் நல்லடையாளங்கள். இவையே காமராஜர் பின்பற்றிய வழித்தடங்கள்.

காந்தி பிறந்தநாளில், காமராஜர் மறைந்தநாளில் இந்த இருவர் தம் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த் முயற்சிக்கு உறுதுணையாக நிற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story