இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் மரணம் - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
உடல்நலக்குறைவால் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு யாதவ மகாசபையின் தலைவருமாக இருந்தவர் எம்.கோபாலகிருஷ்ணன். கடந்த வாரம் இவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
இவர் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் ராதாகிருஷ்ண பிள்ளையின் மகன் ஆவார். சென்னை திருவேற்காடு அருகே உள்ள கோலடி இவருடைய சொந்த ஊர் ஆகும். எம்.கோபாலகிருஷ்ணனுக்கு, ராஜலட்சுமி அம்மாள்(வயது 75) என்ற மனைவியும், ஷகிலா என்ற மகளும் உள்ளனர். ஷகிலாவின் கணவர் அடையாறு பேக்கரியின் தலைவர் ஆர்.ராஜேஷ் ஆவார். கோபாலகிருஷ்ணனின் உடல் சென்னை பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:-
இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார் என்ற வேதனை மிகுந்த செய்தி அறிந்து துயரத்துக்குள்ளானேன். அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழை, எளியவர்களும் வங்கிக்கடனை எளிதில் பெறமுடியும் என்பதற்கு உதாரணமாக இந்தியன் வங்கியின் தலைவராக பணியாற்றிய கோபாலகிருஷ்ணன், ஆரோக்கியமான சமூக சிந்தனை கொண்டவர். அவருடைய மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், இந்தியன் வங்கி முன்னாள் ஊழியர்களுக்கும், அவர் தலைவராக இருந்த தமிழ்நாடு யாதவ மகா சபையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி:-
அமைதியும், அடக்கமும் சமூக நீதியில் ஆழ்ந்த நம்பிக்கையும் உடைய எம்.கோபாலகிருஷ்ணனின் மறைவு அவருடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கே மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், யாதவ மகாசபையின் தலைவருமான கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். எனது நண்பர்களில் ஒருவர். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் யாதவ மகாசபையினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:-
தமிழகத்தில் மிக பிரபலமாக வாழ்ந்து மறைந்திருக்கிற கோபாலகிருஷ்ணனின் மறைவு தமிழகத்துக்கும், தேசிய நண்பர்களுக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அவருடைய மறைவு மிகுந்த வருத்தத்தையும், துன்பத்தையும் தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ஜ.க. மாநிலத்தலைவர் எல்.முருகன், திருநாவுக்கரசர் எம்.பி, தமிழ்நாடு யாதவ மகாசபையின் துணைத்தலைவர் எம்.வி.சேகர் ஆகியோரும் இர ங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related Tags :
Next Story