கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது - தமிழக அரசு அறிவிப்பு


கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2020 3:27 AM IST (Updated: 2 Oct 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.மகுடீஸ்வரி, பெண் காவல் ஆய்வாளர் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, புனித தோமையார்மலை, தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல்), எம்.லதா, பெண் காவல் ஆய்வாளர் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, முசிறிதுறையூர், திருச்சி மாவட்டம்) என்.செல்வராஜூ, காவல் உதவி ஆய்வாளர் (மத்திய புலனாய்வுப் பிரிவு, சேலம் மண்டலம்), சோ.சண்முகநாதன், தலைமைக் காவலர் (ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையம், அயல்பணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்), சு.ராஜசேகரன், தலைமைக் காவலர் (கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம், அயல்பணி மத்திய புலனாய்வுப் பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம்) ஆகியோருக்கு, கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி, குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story