பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், “உங்கள் பிறந்த நாளான இந்த மகிழ்ச்சியான தினத்தில் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தேசத்துக்கும், மக்களுக்கும் நீங்கள் சேவையாற்றுவதற்கு நல்ல உடல்நலத்துடன் கூடிய மேலும் பல ஆண்டுகளை அருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்“ என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

Related Tags :
Next Story