அரசு, சுயநிதி கல்லூரிகளில் உள்ள மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவிப்பு


அரசு, சுயநிதி கல்லூரிகளில் உள்ள மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2020 6:02 AM IST (Updated: 2 Oct 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

அரசு, சுயநிதி கல்லூரிகளில் உள்ள மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 2020-21-ம் கல்வியாண்டில் அரசு மருத்துவக்கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி.(நர்சிங்), பி.பார்ம், பி.பி.டி., பி.எஸ்.சி. ரேடியோகிராபி உள்பட 17 விதமான படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். அரசு கல்லூரிகளில் 1,558 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 11 ஆயிரத்து 601 இடங்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 159 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் http://www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் சென்று விவரங்களை தெரிந்துகொண்டு, இந்த படிப்புகளில் சேர வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அச்சுப்பிரதி (‘பிரிண்ட்’) எடுத்து வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் சென்றடையும் வகையில் ‘செயலாளர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

இந்த தேதி மற்றும் நேரத்துக்குபின் தாமதமாக வரும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. தபால்மூலம் அனுப்புவதில் ஏற்படும் தாமதமும் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு 9884224648, 9884224649, 9884224745, 9884224746 என்ற செல்போன் எண்களிலும், paramedicalsection@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story