தேயிலை கொள்முதல் விலை ரூ.30 ஆக உயர்வு - தேயிலை தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
கிலோவுக்கு 13 ரூபாய் 28 பைசாவாக இருந்த தேயிலை கொள்முதல் விலை ரூ.30 ஆக உயர்ந்திருப்பதால் தேயிலை தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை,
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தென்னிந்திய தேயிலை வாரியம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த 3 மாநிலங்களிலும் 62 ஆயிரத்து 884 ஹெக்டேர் பரப்பளவிலும், தமிழகத்தில் 29 ஆயிரத்து 813 ஹெக்டேர் பரப்பளவிலும் தேயிலை பயிரிடப்படுகிறது. நீலகிரியில் மட்டும் சுமார் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
அங்கு பதிவு செய்யப்பட்ட சிறு, குறு விவசாயிகள் 56 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இலைகளை வாங்கி அரைத்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் 184 உள்ளன. தேயிலை தோட்ட விவசாயிகளிடம் இருந்து இலைகளை கொள்முதல் செய்வதற்கான விலையை தேயிலை வாரியம் நிர்ணயம் செய்து வருகிறது. அந்தவகையில் ஒரு கிலோ இலையின் கொள்முதல் விலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 ரூபாய் 28 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அது தற்போது 30 ரூபாய் 3 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலையிலேயே விவசாயிகளிடம் இருந்து இலைகளை தொழிற்சாலைகள் வாங்குவதை கள பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தேயிலை வாரியம் உத்தரவிட்டுள்ளது. தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ள, வரலாறு காணாத கொள்முதல் விலை உயர்வு விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலைகள் கொள்முதல் விலை சராசரியாக 2½ மடங்கு உயர்ந்திருப்பதால் தேயிலை வாரியத்தின் அறிவிப்புக்கு, தேயிலை தோட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் எம்.பாலாஜி கூறியதாவது:-
தோட்ட அளவில் சிறு, குறு விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள், மானியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து 140 பேருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மானியமாக சுமார் ரூ.22 கோடி அளவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலைகளை வாங்கி அரைத்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு நிறைய தரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தரமான தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. தேவைக்கு அதிக உற்பத்தி இருந்ததால், தேயிலைகளை தரமாக கொடுக்கும் வகையில் வழங்கலை தேவைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தினோம்.
தெற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தேயிலை தொழிற்சாலைகளையும், தேயிலை வாரிய அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, தரமான பசுந்தேயிலை கொள்முதல் இல்லாமை, சுகாதார தரமின்மை உள்பட விதிகளை மீறிய காரணங்களுக்காக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 42 தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை கழிவு உரிமம் பெற்றவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் தேயிலை வாரியம் நிர்ணயம் செய்யும் தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை பின்பற்றாத தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து நோட்டீஸ் வழங்கப்பட்டு, அதை சரிசெய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தேவை அதிகரித்து வாங்கும் விலையும் உயர்ந்திருக்கிறது.
இதேபோல ஜப்பானிய நாட்டு தொழில்நுட்ப முறைப்படி நவீன ஏலம் முறையும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன்படி, வாங்குபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் இடையே வெளிப்படைத்தன்மையும், சரியான விலை நிர்ணயம் முறையும் இந்த முறையின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும். வாங்குபவர்களும், விற்பனை செய்பவர்களும் சுதந்திரமாக செயல்படலாம். இதனால் இந்த கொள்முதல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு ஐ.ஐ.எம். ஆய்வு செய்து முன்மொழிந்த இந்த நவீன ஏல முறை குன்னூரில் பரீட்சார்த்த முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இலைகளுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து இலைகளை கொள்முதல் செய்வதற்கு தேயிலை வரலாற்றிலேயே இந்த அளவுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story