நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு - கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும் நடவடிக்கை
நடப்பாண்டு நெல் கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ,1,888, சாதாரண ரகத்திற்கு ரூ.1,868 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சரின் உத்தரவுபடி தமிழகத்தில் கடந்த கொள்முதல் பருவமான 2019-2020-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 5 லட்சத்து 85 ஆயிரத்து 241 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த கொள்முதல் அளவானது தமிழக வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும்.
தற்போது, கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி உள்ள 2020-2021-ம் ஆண்டு கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1,888 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1,868 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.70 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.50 வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.1,958 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1,918 வழங்கப்படும். கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள மின்னணு எந்திரங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கடந்த 1-ந்தேதி முதல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. எனவே, நேற்று முதல் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளின் நெல்லினை, உயர்த்தப்பட்ட விலையில் கொள்முதல் நடைபெற்று வருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லினை உடனடியாக கொள்முதல் செய்யும் வகையில் இன்று (ஞாயிற்றுகிழமை) அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, 591 நேரடி கொள்முதல் நிலையங்களை அரசால் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது, சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லானது அறுவடை எந்திரம் மூலம் விவசாயிகளால் ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல்லினை பாதுகாப்பாக வைப்பதற்கு பாலித்தீன் தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய இயலும். அதனால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அதிக அளவில் நிலுவையில் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்த தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உயர்த்தப்பட்ட அதிக விலையில் விற்பனை செய்து பயனடையலாம்.
மேற்கண்ட தகவல் தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story