திருப்பூர் குமரன் பிறந்த நாள்: ‘தேசத்திற்காக கடைசி நொடி வரை போராடியவர்’ - எடப்பாடி பழனிசாமி புகழாரம்


திருப்பூர் குமரன் பிறந்த நாள்: ‘தேசத்திற்காக கடைசி நொடி வரை போராடியவர்’ - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
x
தினத்தந்தி 5 Oct 2020 2:45 AM IST (Updated: 5 Oct 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

தேசத்திற்காக கடைசி நொடி வரை போராடிய திருப்பூர் குமரனை அவரது பிறந்த நாளில் போற்றி மகிழ்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தேசத்திற்காக கடைசி நொடி வரை போராடி தன்னுயிர் நீத்த திருப்பூர் கொடி காத்த குமரனை அவரது பிறந்த நாளில் போற்றி மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விடுதலை வேட்கையும், தேசப்பற்றுமே உயிரெனக் கொண்டு, சுதந்திரப் போரில் செங்குருநீர் தெறிக்க மண்ணில் விழுந்த போதிலும் தேசியக் கொடியினை விழாது தாங்கி பட்டொளி வீசி பறக்கச் செய்த கொடிகாத்த திருப்பூர் குமரன் பிறந்த நாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவில் ஏந்தி போற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story