வேளாண் சட்டம் மோசமானது என்பதை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் - தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
வேளாண் சட்டம் மோசமானது என்பதை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2000-ம் ஆண்டின் முதல் நாள் குமரி முனையில் 133 அடியில் வள்ளுவருக்கு சிலை வைத்த நாளில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி அடைந்த மகிழ்ச்சியை வாழ்நாளில் வேறு எப்போதாவது அடைந்திருப்பாரா என தெரியவில்லை. தன்னுடைய மாபெரும் கடமை முடிந்துவிட்டதாக கருணாநிதி பெருமைப்பட்டார்.
இப்படி ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளாக கனவு கண்டார். இப்படி ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று தவம் இருப்பதாகவும் சொன்னார். 1975-ம் ஆண்டே இப்படி ஒரு சிலை அமைக்க கருணாநிதி அறிவிப்பு செய்தாலும் 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்றுதான், வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதனால்தான், “சிலையைத் திறக்கும் பொத்தானை அழுத்தியபோது, எனது விரல் மரத்துப் போய்விட்டது” என்று முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார். அந்த அளவுக்கு அவர் உணர்ச்சி மயமாக ஆனார்.
அத்தகைய குமரியில் தி.மு.க. முப்பெரும் விழா நடப்பது பொருத்தமானது. முத்தமிழறிஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்போதெல்லாம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றித்தரப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய நிலைமை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இது ஆட்சி அல்ல; தமிழகத்தின் வீழ்ச்சி. அதைத்தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். முழுக்க முழுக்க ஊழல் அரசாங்கம் தான் நடந்து கொண்டு வருகிறது. விரைவில் கோட்டையை விட்டு வெளியேறுங்கள் என்பதுதான் அவர்களிடம் நாட்டு மக்கள் வைக்கின்ற ஒரே கோரிக்கையாக இருக்கிறது. மத்திய அரசாங்கம் கொண்டுவரும் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்த தமிழக அரசு எதுவும் செய்யாது என்பதால்தான் 3 சட்டங்களுக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற சொன்னோம்.
விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்
கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. கிராம சபைகள் மக்களவைக்கு இணையானவை என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. எங்களுக்கு எது வேண்டும்? எங்களுக்கு எது வேண்டாம்? என்பதை தீர்மானிக்கும் உரிமை அந்தந்த கிராமங்களுக்கு உள்ளது. அந்தந்த அடிப்படையில்தான் தீர்மானம் நிறைவேற்ற சொன்னோம்.
ஆனால் கிராமசபை கூட்டத்தையே கலைத்துவிட்டார்கள். கிராமசபை கூட்டம் நடந்தால் கொரோனா பரவும் என்று அரசு சொல்கிறது. கிராமசபை கூட்டம் நடத்தலாம் என்று அறிவித்தபோது நாட்டில் கொரோனா இருப்பது தமிழக அரசுக்கு தெரியாதா?. கிராமசபை கூட்டதுக்கு தடை போட்டது, விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். கிராமங்களுக்கு செய்யும் துரோகம். காந்தியடிகளுக்கு செய்யும் துரோகம். ஜனநாயகத்துக்கு செய்யும் துரோகம். இந்தியாவின் எதிர்காலத்துக்கு செய்யும் துரோகம்.
இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தை ஆளும் ஆட்சியாக இருந்தாலும், அவை விவசாயிகளை மதிக்கவில்லை; விவசாயத்தையும் மதிக்கவில்லை. “ஏழைத் தாயின் மகன் நான்” என்கிறார் பிரதமர் மோடி. “நானும் விவசாயிதான்” என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இவர்கள் இருவரும் ஏழைகளையும் காப்பாற்றவில்லை. விவசாயிகளையும் காப்பாற்றவில்லை. இவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை, கார்ப்பரேட்டுகளுக்காகத்தான் ஆட்சி நடத்துகிறார்கள். இந்த வேளாண் சட்டம் எவ்வளவு மோசமானது என்பதை அனைவரும் பொதுமக்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டும்.
மக்களை மறந்துவிட்டு, நாற்காலியையே நினைத்துக்கொண்டிருக்கும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயக போராட்டம் தொடங்கிவிட்டது. அதில் குமரி மாவட்டமும் தன் பங்கை குறைவில்லாமல் செலுத்தட்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Tags :
Next Story