‘கோவேக்சின்’ தடுப்பூசி 3-வது கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும் - எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலைய டீன் சுந்தரம் தகவல்
‘கோவேக்சின்’ தடுப்பூசி 3-வது கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாகவும், இதற்காக தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலைய டீன் டாக்டர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன. ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா ஆகிய நிறுவனமும் இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி ஆகியவை தமிழகத்தில் சோதனையில் உள்ளன.
பொதுமக்களுக்கு செலுத்தி இந்த தடுப்பூசிகள் ஒவ்வொரு கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பயம் இன்னும் முழுமையாக அகலாத நிலையில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதை எதிர்நோக்கி பொதுமக்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார்கள். பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு பல்வேறு கட்டங்களாக தீவிரமாக நடைபெற்று வரும் தடுப்பூசி பரிசோதனைகள் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
‘கோவேக்சின்’ தடுப்பூசியை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்பட 12 நிறுவனங்கள் பரிசோதித்து வருகிறது. எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் முதல் கட்டமாக ஒரு பெண் உள்பட 30 பேருக்கு கடந்த ஜூலை மாதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
இதையடுத்து 2-ம் கட்டமாக கடந்த ஆகஸ்டு மாதம் 45 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர்களுடைய உடல்நிலையும் எந்த பாதிப்பும் இன்றி நன்றாக உள்ளது. இதையடுத்து 3-ம் கட்டமாக பெரிய அளவில் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்த பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த பின்னர், ‘கோவேக்சின்’ தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதுகுறித்து எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் டாக்டர் ஏ.சுந்தரம் கூறியதாவது:-
‘கோவேக்சின்’ தடுப்பூசி பரிசோதனை எங்களுடைய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. முதல் கட்டத்தில் 30 பேருக்கும், 2-வது கட்டத்தில் 45 பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக இந்த தடுப்பூசியை போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் எதுவும் இன்றி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
3-வது கட்டமாக அடுத்த வாரம் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக ஆட்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சுமார் 1,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
பரிசோதனை தொடங்கிய முதல் நாளில் ஒரு ஊசியும், 28 நாட்களுக்கு பின்னர் மற்றொரு ஊசியும் செலுத்தப்படும். பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் 6 மாதங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவார்கள். அதற்கு பின்னரே தடுப்பூசி பரிசோதனை வெற்றியானதாக கருதப்படும். முதல் மற்றும் 2-வது கட்ட பரிசோதனையில் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து பரிசோதிக்கப்பட்டது.
தற்போது 3-ம் கட்டமாக நடைபெற உள்ள பரிசோதனையில் தடுப்பூசியின் திறன் உறுதி செய்யப்படுவது குறித்து பரிசோதிக்கப்படுகிறது. 3-ம் கட்ட தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் தீவிரமாக மேற்கொண்டுவருகிறோம். 3-ம் கட்ட தடுப்பூசி பரிசோதனைக்கு உட்பட விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் எங்களுடைய மருத்துவமனையில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story