மாநில செய்திகள்

அக்.31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - சென்னை மாநகராட்சி + "||" + No public access to Marina Beach until Oct. 31 - Chennai Corporation

அக்.31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - சென்னை மாநகராட்சி

அக்.31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை  - சென்னை மாநகராட்சி
அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் மெரினா   கடற்கரைக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும், மெரினா கடற்கரைக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை. 

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம்,  வழக்கு விசாரணை ஒன்றின் போது  மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி எடுத்துள்ள முடிவு குறித்து வரும் அக்டோபர் 5-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டது. 

இதன்படி, இந்த வழக்கில் இன்று பதிலளித்த சென்னை மாநகராட்சி அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில்  பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனக்கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு- சென்னை உயர் நீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. மாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
மாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
3. அரசு ஊழியர்கள் மட்டத்தில் உள்ள கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பொதுநலனுடன் ஒரு திட்டத்தை உருவாக்கும்போது, அரசு ஊழியர்கள் மட்டத்தில் சில கருப்பு ஆடுகள், சுயநலனுக்காக முட்டுக்கட்டையாக இருந்து அதை தடுப்பார்கள். இதுபோன்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்
ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.
5. தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு - முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு
தேசியக் கொடியை அவமதித்ததாக சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.