ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: கனிமொழி உட்பட திமுகவினர் கைதாகி விடுதலை
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற எம்.பி கனிமொழி உட்பட திமுகவினர் அனைவரும் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை,
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் கையில் ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். போலீசாரின் தடையை மீறி பேரணி சென்றதாக திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு நடந்த பேரணியில் கைது செய்யப்பட்ட திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி விடுதலை செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி, போலீசாரின் தடையை மீறி பேரணி செல்ல முயன்று கைது செய்யப்பட்ட திமுக மகளிரணியினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி, “பெண்களின் பாதுகாப்புக்கான சூழலை நிச்சயம் திமுக உருவாக்கித் தரும். ஹத்ராஸ் சம்பவம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். ஆளுநரிடம் மனு அளிக்க செல்வதைக் கூட தடுக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் உள்ளது. ஆளுநரை சந்திக்க சென்றதை ஏன் தடுத்து நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story