சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் பலி
சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் பாபு என்பவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை,
சென்னையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருபவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிகழ்வுகள் சோகத்தை அளித்து வருகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்பட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தலைமை செயலக காலனி காவல் உதவி ஆய்வாளர் பாபு என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 3ம் தேதி அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
Related Tags :
Next Story