மாநில செய்திகள்

வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வேண்டுகோள் + "||" + Agricultural equipment available The Tamil Nadu government should arrange GK Vasan Request

வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வேண்டுகோள்

வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வேண்டுகோள்
வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இயற்கையின் அருளால் விவசாய பணிகள் குறித்த நேரத்தில் தொடங்கப்பட்டு இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

'காலத்தே பயிர் செய்' என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் விவசாயப் பணியை தொடங்கினாலும் பயிர் செழித்து வளர வேண்டுமென்றால் அதற்கான முறையான உரங்கள் இடவேண்டும். அப்போதான் நாம் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்கும். தற்பொழுது காவிரி டெல்டா மாவட்டங்களில், உரங்கள், வேளாண் விற்பனை நிலையங்களில் தேவைக்கு ஏற்ப கிடைக்கவில்லை. அதனால் உழவுப் பணியை தொடங்கினாலும் தொடர் பணி முற்றுபெறாமல் இருக்கிறது.

விவசாயிகளின் அவசரத் தேவையையும், உரம் தட்டுப்பாட்;டையும் தனியார்துறையினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விலையை உயர்த்துகின்றனர். 'உழுதவன் கணக்குப் பார்த்தால்; உழக்கு கூட மிஞ்சாது' என்ற பழமொழிக்கு எற்ப பல்வேறு விவசாய செலவுக்கு இடையில் உரம் தட்டுப்பாடாலும், விலையேற்றத்தாலும், விவசாயத்தில் வருமானம் எதுவும் மிஞ்சாது என்ற நிலைதான் ஏற்படும்.

தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயப் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே, அவற்றின் தேவைக்கு ஏற்ப தமிழக அரசு காலதாமதம் இன்றி அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்கு வழிவகை செய்ய வேண்டும். முன்னேற்பாட்டுடன் அனைத்து வேளாண் விற்பனை மையங்களிலும் விவசாய இடுபொருள்கள், பூச்சி மருந்துகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலமாக கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
2. ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3. வேளாண் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
வேளாண் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. வீடு தேடிவரும் ரேஷன் பொருள்: 3,501 நகரும் நியாயவிலை கடை திட்டம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
5. டாஸ்மாக் தற்காலிக பணியாளர் ஓய்வு வயதை 59-ஆக உயர்த்தலாம் அரசு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
டாஸ்மாக் தற்காலிக பணியாளர்களின் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தலாம் என்றும் இது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.