துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் சந்திப்பு
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை மூத்த அமைச்சர்கள் இன்று சந்தித்துப்பேசினர்.
சென்னை,
அதிமுகவில் நாளை முதல்வர் வேட்பாளராக யார்? முன்னிறுத்தப்படுவார் என அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் கடந்த சில தினங்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே அமைச்சர்கள் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழலில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிய தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சந்தித்துப்பேசினர்.
இந்த நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தையும் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் சந்தித்துப்பேசியுள்ளனர்.
Related Tags :
Next Story