அதிமுக அவைத்தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், எந்த மாற்றமும் இல்லை - மதுசூதனன்
அதிமுக அவைத்தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், எந்த மாற்றமும் இல்லை என மதுசூதனன் கூறி உள்ளார்
சென்னை
அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே நேற்று நடந்த முதற்கட்ட பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. வழிகாட்டு குழுவை அமைக்க ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வரோ.பன்னீர் செல்வத்தையும் அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
உடல்நிலை காரணமாக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,
அதிமுக அவைத்தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், எந்த மாற்றமும் இல்லை என மதுசூதனன் கூறி உள்ளார்.
மேலும் அவர் அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா கொடுத்தது; நான் இருக்கும் வரை அவைத்தலைவராகத்தான் இருப்பேன் ஓ.பி.எஸ். எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார் என கூறினார்.
Related Tags :
Next Story