மாநில செய்திகள்

“தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்” - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + "AIADMK rule in Tamil Nadu again" - Minister Jayakumar

“தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்” - அமைச்சர் ஜெயக்குமார்

“தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்” - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் எல்லாருடைய விருப்பமும் அதுதான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே எல்லோரும் விரும்புவது ஆகும். இதுவே அனைவரின் ஒருமித்த கருத்து. முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரிடையே ஒருமித்த கருத்து ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு முடிவுக்கு பிறகே கலந்தாய்வு - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தைப் பொறுத்தவரை 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
4. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின்
‘தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைவதற்கான காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’, என நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
5. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.