தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இது அல்ல - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இது அல்ல என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? என்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆன்லைன் வகுப்புகள், கல்விக் கொள்கை, பொதுத்தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார், என்று தெரிவித்தார். மேலும், பள்ளிகளைத் திறப்பதற்கான நேரம் இது அல்ல என்று தெரிவித்த அவர், தற்போது பள்ளி வளாகங்களை தயார் படுத்தும் பணியில், பள்ளிக்கல்வித்துறை முழுமையாக ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.

Related Tags :
Next Story