மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல் + "||" + Corona affects 5,017 new people in Tamil Nadu- Health Information

தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,30,408 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 71 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,917 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,548 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,75,212 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 45,279 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,306 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: புதிதாக 2,652 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்: புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
4. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.