அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி: அதிமுகவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி: அதிமுகவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2020 2:52 PM IST (Updated: 7 Oct 2020 2:52 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சீர்காழி,

சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அதிமுக சார்பில் வழக்குரைஞர் நெடுஞ்செழியன் தலைமையில் பட்டாசு வெடித்து,பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி கார்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வினோத், ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், பேரூர்கழக துணை செயலாளர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகிகள் விஜி, பாலாஜி, மணி, லாட்ஜ் மணி, அலெக்ஸ், பரக்கத் அலி, ரவி சண்முகம் பங்கேற்று இனிப்புகளை வழங்கினர்.

கொள்ளிடத்தில் ஒன்றியச் செயலாளர் நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் சொக்கலிங்கம், ராஜேந்திரன், ஆனந்த நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

அதேபோன்று வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூர் கழகச் செயலாளர் போகர் ரவி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் செல்லையன், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் அஞ்சம்மாள், துணைத் தலைவர் பார்த்த சாரதி, முன்னாள் வார்டு உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story