வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்: திடீரென பிரேக் போட்ட ஓட்டுநர் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழுந்த கண்டக்டர் + "||" + Vadivelu movie style Driving with a sudden brake Broke the glass and fell Conductor
வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்: திடீரென பிரேக் போட்ட ஓட்டுநர் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழுந்த கண்டக்டர்
ஆவடி அருகே வடிவேலு பட பாணியில் பேருந்து நடத்துனர் கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாலையில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னை ஆவடி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் அரசு சிற்றுந்து சென்று கொண்டிருந்துள்ளது. பேருந்தின் குறுக்கே குழந்தை ஒன்று திடீரென ஓடியதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், திடீரென பிரேக் போட்டிருக்கிறார். அப்போது, பயணிகளுக்கு பயணச் சீட்டு கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர் ஆறுமுகம், நிலைத் தடுமாறி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாலையில் விழுந்துள்ளார்.
கண்டக்டர் ஆறுமுகம் மீது கண்ணாடி துகள்கள் குத்தியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தையின் உயிரைக் காக்க டிரைவர் போட்ட பிரேக்கால், கண்டக்டர் வடிவேல் பட பாணியில் பேருந்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.