முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து பழனிசாமி நன்றி தெரிவித்தார்
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
சென்னை
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இல்லத்திற்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அதுபோல் வைத்திலிங்கம், முனுசாமி, மனோஜ் பாண்டியன், ப.மோகன், மாணிக்கம் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர்.
Related Tags :
Next Story