மாநில செய்திகள்

பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு: 4 சுற்றுகள் கொண்ட அட்டவணை வெளியீடு + "||" + General Section Online Consultation for Engineering Admissions: Table Publication with 4 rounds

பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு: 4 சுற்றுகள் கொண்ட அட்டவணை வெளியீடு

பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு: 4 சுற்றுகள் கொண்ட அட்டவணை வெளியீடு
பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வுக்கான 4 சுற்றுகள் கொண்ட அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் தொடங்கியது. சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்பட 2,413 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 1,300 பேர் முன்பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்தனர்.


இதனை தொடர்ந்து பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்விற்கான 4 சுற்றுகள் கொண்ட அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. மேலும், தொழில் பிரிவு மாணவர்களின் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஒரே சுற்றாக நடைபெறும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.