அ.தி.மு.க.வை நூறாண்டு காலத்துக்கு வெற்றி இயக்கமாக உருவாக்க உழைப்பேன் - எடப்பாடி பழனிசாமி உறுதி
ஜெயலலிதா கூறியது போல அ.தி.மு.க.வை அடுத்த நூறாண்டு காலத்துக்கு வெற்றி இயக்கமாக உருவாக்க உழைப்பேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அடுத்து முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் தனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தில் ஜெயலலிதா இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து, அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப அ.தி.மு.க.வை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லவும், ஜெயலலிதா கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கட்சியை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story