மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியிருப்பதா? - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை


மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியிருப்பதா? - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
x
தினத்தந்தி 8 Oct 2020 5:32 PM IST (Updated: 8 Oct 2020 5:32 PM IST)
t-max-icont-min-icon

மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே இந்தியா நம்பியிருப்பதா என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை,

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அரசு உதவி வழங்க கோரி சென்னையை சேர்ந்த வின்கெம் என்ற நிறுவனம் அளித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உள்நாட்டு ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே இந்தியா நம்பியிருப்பது வேதனைக்குரியது என்று நீதிபதி தெரிவித்தார். மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு ஒரு நாட்டை மட்டுமே நம்பியிருப்பது தேச பாதுகாப்புக்கு ஆபத்தானது என்றும் நீதிபதி கிருபாகரன் சுட்டிக்காட்டினார்.

Next Story