"கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து
கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை,
கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து வகை விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கபடி, கால்பந்து, ஹாக்கி, ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகள் சிறப்பானவை என்றும் அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story