மாநில செய்திகள்

"பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் திமுக கூட்டணி பற்றி பேசியிருக்கலாம்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் + "||" + "Pon Radhakrishnan may have talked about DMK alliance to nurture BJP" - Minister OS Maniyan

"பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் திமுக கூட்டணி பற்றி பேசியிருக்கலாம்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

"பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் திமுக கூட்டணி பற்றி பேசியிருக்கலாம்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் திமுக கூட்டணி பற்றி பேசியிருக்கலாம் என கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து கூறியுள்ளார்.
சென்னை,

நாகை நம்பியார் நகரில், 111 பயனாளிகளுக்கு சுனாமி நிரந்தர வீட்டுக்கான வீட்டுமனை பட்டாக்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது தேர்தல் கூட்டணி பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “கண்ணில் காமாலை ஏற்பட்டால் சட்டமன்ற தேர்தலில் கட்சிகளின் காட்சி மாறும்” என்று கூறினார். மேலும் பாரதிய ஜனதா கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என பொன்ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து கருத்து தெரிவித்த அவர், பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வாறு கூட்டணி பற்றி பேசியிருக்கலாம் என்று கூறினார்.