மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவு - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் + "||" + Union Minister Ram Vilas Paswan passes away - Sarath Kumar condoles
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவு - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல்
மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் ராம் விலாஸை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.