மாநில செய்திகள்

"அதிமுக முதல்வர் வேட்பாளர் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்" - அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் + "||" + "AIADMK chief minister candidate is the chief minister candidate of the alliance" - Minister Pandiyarajan

"அதிமுக முதல்வர் வேட்பாளர் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்" - அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன்

"அதிமுக முதல்வர் வேட்பாளர் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்" - அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன்
அதிமுக முதல்வர் வேட்பாளர் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடங்களை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் அறிவித்துள்ளோம். இந்த கூட்டணி அதிமுக தலைமையில் தான் அமையும். கூட்டணி கட்சிகள் இணைந்து முடிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் அது அவர்களின் உரிமை.


எங்களைப் பொறுத்தவரை இந்த கூட்டணியில் பெருவாரியான தொகுதிகளில்  அதிமுக தான் தேர்தலை சந்திக்கும் என்பதால், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் கூட்டணியின் முதல்வராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்தார்.