சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை


சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
x
தினத்தந்தி 10 Oct 2020 2:48 AM GMT (Updated: 10 Oct 2020 2:48 AM GMT)

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ள அரசு அனுமதி வழங்கப்பட்டது.  அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து 19வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.  அதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.84.14க்கு விற்பனையாகிறது.  டீசல் விலையிலும் 9வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் லிட்டருக்கு ரூ.75.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story