வடகிழக்கு பருவமழை - வரும் 12 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை
வடகிழக்கு பருவமழை தொடர்பாக வரும் 12 ஆம் தேதி முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழையையொட்டி உயர் அதிகாரிகளுடன் வரும் 12-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளை தூர் வாருதல், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. இதில் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story