ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு


ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2020 8:35 PM IST (Updated: 10 Oct 2020 8:35 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் மேலாண் இயக்குநராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெங்கடேஷ் பள்ளிக் கல்வித்துறை ஆணையராகவும், குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக கிர்லோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலராக கிராந்தி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஜி தாமஸ் வைத்தியன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story