‘நிசான் மாக்னைட்’ பி-எஸ்.யூ.வி. ரக கார் 21-ந்தேதி அறிமுகம் நிசான் மோட்டார் இந்தியா அறிவிப்பு
‘நிசான் மாக்னைட்’ பி-எஸ்.யூ.வி. ரக கார் வருகிற 21-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை,
‘நிசான்’ இந்தியா நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘நிசான் மாக்னைட்’ பி-எஸ்.யூ.வி. ரக கார் மெய்நிகர் முறையில் வருகிற 21-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் சாலைக்கு வரும்போது, புரட்சிகரமான, வலிமையான மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் பல்வேறு உயர்ரக அம்சங்களையும் கொண்டிருக்கும்.
‘நிசான் ஜிடி-ஆர்’, ‘நிசான் ஆரியா’ உள்ளிட்ட நிசான் கம்பெனியின் பிற ரக கார்கள் பரிசோதிக்கப்பட்ட உலக தரம் வாய்ந்த நிசான் டோச்சிகி பரிசோதனை மையத்தில் ‘நிசான் மாக்னைட்’ கார் பரிசோதிக்கப்பட்டது.
முதல் மற்றும் தனிச்சிறப்புமிக்க அம்சங்களை நிசான் நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்தவகையில், ‘நிசான் மாக்னைட்’ பி-எஸ்.யூ.வி. ரக கார் உறுதியான வெளிப்புற தோற்றம், அலங்கார உள்புற தோற்றம், தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகிய நிசான் நிறுவனத்தின் 4 முக்கிய தூண்களையும் பெற்று விளங்கும்.
இதுகுறித்து நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:-
நம்முடைய இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில்கொண்டு, ‘நிசான் மாக்னைட்’ ரக கார் ஜப்பானில் தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்.யூ.வி. ரக கார்களின் எல்லைகளை உடைத்து, மறுவரையறையை ஏற்படுத்தி ‘நிசான் மாக்னைட்’ கார் சாதனை படைக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.
ஆட்டத்தை மாற்றும் போக்கு உடைய இந்த காரை இந்தியாவில் கொண்டு வருவதற்கு மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கண்ட தகவல் நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story