ஜனநாயக போர்க்களத்தில் ரஜினிகாந்த்தின் வழி தனி வழி - இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்


ஜனநாயக போர்க்களத்தில் ரஜினிகாந்த்தின் வழி தனி வழி - இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்
x
தினத்தந்தி 11 Oct 2020 3:05 PM IST (Updated: 11 Oct 2020 3:05 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயக போர்க்களத்தில் ரஜினிகாந்த்தின் வழி தனி வழி என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வந்துவிட்டார் என்று தெரிவித்தார். மேலும் கிராம சபைக்கூட்டம், தீண்டாமை ஒழிப்பு இவையெல்லாம் ஆன்மீக அரசியல் கொள்கைகள் எனவும் இந்த கொள்கைகள் ரஜினிகாந்த அவர்களின் தலைமையில் மிகப்பெரிய அளவில் வலிமை பெறப்போகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், “வரும் ஜனவரிக்கு பிறகு திராவிட அரசியலா? ஆன்மீக அரசியலா? என்ற நிலை தான் ஏற்படப் போகிறது. தற்போது நடந்து வரும் சாதி மத அரசியலுக்கு முடிவு கட்டி, ரஜினிகாந்த அவர்களின் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மீக அரசியல் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். ஜனநாயக போர்க்களத்தில் ரஜினிகாந்த் அவர்களின் வழி தனி வழி. அவரது வழி ஆன்மீக வழி, அற வழி. அரசியல் ஆட்சி அதிகாரத்தை நோக்கிச் செல்லாமல், மக்களிடையே அவர்களுக்கான ஆட்சியை ரஜினிகாந்த ஏற்படுத்தப் போகிறார்” என்று அவர் தெரிவித்தார்.

Next Story