சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை
x
தினத்தந்தி 12 Oct 2020 6:10 PM IST (Updated: 12 Oct 2020 6:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், வடபழனி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Next Story