சென்னையில் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு


சென்னையில் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 13 Oct 2020 4:49 PM IST (Updated: 13 Oct 2020 4:49 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.

சென்னை,

சென்னை கே.கே.நகர் திமுக அலுவலகத்தில் பணியில் இருந்த தனசேகரனை மர்ம நபர்கள் சிலர் உள்நுழைந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். அவரை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த பெண் ஊழியரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பி ஓடியது.

இதனால் பலத்த காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் பணியாற்றிய பெண் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் விரைந்து வந்து சிசிடிவி கேமரா பதிவைக்கொண்டு தப்பி ஓடியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story